காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோவில் யாக சாலையில் இன்று மாலை 'திடீர்' தீ விபத்து ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் ராஜகோபுரம் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி இடி தாக்கி இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடந்து வந்தது.
அந்த பணிகள் நிறைவடைந்ததையொட்டி வரும் 8-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னர் புதிய ராஜகோபுரத்திற்கு 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த வியாழக்கிழமை புதிய ராஜகோபுரத்திற்கு காலை 8 மணியில் இருந்து 9.30 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
யாக சாலையில் தீ விபத்து:
இந்நிலையில் 8-ஆம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோமங்கள் நடந்து வந்தன. இன்று மாலை காளஹஸ்தி கோயில் யாக சாலையில் 'திடீர்' தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து யாகசாலையில் நடந்த பூஜையின் பொழுது தீ விபத்து ஏற்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary:
Kalahasthi: Kalahasthi Andhra Pradesh Shiva temple on the road this evening 'sudden' fire.