கென்சாஸ் : அமெரிக்காவின் கென்சாஸ் மாகாணம் ஒலதே மதுபான விடுதியில் பிப்ரவரி 22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய இன்ஜினியர் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் விடுதியில் நடந்தது என்ன என்பது பற்றி உயிரிழந்த ஸ்ரீநிவாசுடன் இருந்த அவரது நண்பர் விளக்கி உள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (32) தான் கொலை செய்யப்பட்டவர். இவரது நண்பர் அலோக். இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்
பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி :
"ஸ்ரீநிவாசும் நானும் 9 ஆண்டுகளாக நண்பர்கள். நாங்கள் அடிக்கடி மதுபான விடுதியில் சந்தித்து, எங்களின் வேலை பற்றி பேசிக் கொள்வோம். சம்பவம் நடந்த அன்று, மாலை 7 மணியளவில் சந்தித்த நாங்கள், மது அருந்தி விட்டு, வீட்டுக்கு போக முடிவு செய்திருந்தோம். இருவரும் பீர் சாப்பிட்டபடி, எங்கள் நண்பர்கள் பாலிவுட் படங்களை பார்க்க விரும்புவது பற்றி தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களுக்கு எந்த மாதிரி படங்களை பார்க்கச் சொல்லலாம் என பேசினோம்.
தகராறு:
அப்போது அங்கு வந்த அந்த நபர், நீங்கள் எந்த நாடு, சட்ட விரோதமாக இங்கு தங்கி உள்ளீர்களா என கேட்டு எங்களிடம் வாக்குவாதம் செய்தார். ஏதோ தவறாக நடக்க போகிறது என எங்களுக்கு தோன்றியது. அப்போது அங்கு டிவி.,யில் கூடைப்பந்து போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால், சத்தம் அதிகமாக இருந்தது. நான் நேராக மேனேஜரிடம் சென்று புகார் கூறினேன். ஸ்ரீநிவாசும் என்னுடன் வந்தார். மேனேஜர் அந்த நபரை கண்டித்து, வெளியேற்றினார். நாங்கள் இருவரும் எங்கள் இடத்திற்கு திரும்பி வந்தோம்.
அந்த சத்தத்திலும் யாரோ ஒருவர், அவன் பின்னால் துப்பாக்கியுடன் இருக்கிறான் என கூறியதை கேட்டேன். அதை யார் கூறினார்கள் என எனக்கு தெரியாது. உடனே துப்பாக்கி சத்தம் கேட்டது. நான் வலது பக்கமாக விழுந்தேன். அந்த நபர் எனக்கு பின்னால் இருந்ததால் அவர் யாரை குறி வைத்தார் என என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. நான் பலமுறை எழுந்து நிற்க முயற்சித்தும் என்னால் முடியவில்லை. பின் நான் எழுந்து நின்ற உடன் பிராட் என்பவர் தனது சட்டையை கழற்றி எனது காலில் இறுக்கமாக கட்டி, ரத்தம் வழிவதை நிறுத்தினார். அப்போது ஸ்ரீநிவாஸ் அசைவற்று கிடந்தார். என்னை மட்டும் ஸ்ட்ரக்சரில் ஏற்றிச் சென்றனர்" என்றார்.
ஸ்ரீநிவாசின் மனைவி சுனைனா பேட்டி :
சம்பவம் நடந்த அன்று மாலை, என் கணவரிடம் எப்போது வீட்டிற்கு திரும்புவீர்கள் என கேட்டேன். 7 மணி என கூறி, மெசேஜ் செய்திருந்தார். ஆனால் 7 மணிக்கு பிறகும் அவரிடம் இருந்து எந்த தகவலும் வராததால், பலமுறை அவக்கு போன் செய்தேன். ஆனால் அவரது போன் சுவிட்ஆப் ஆகி இருந்தது.
அதனால் அலோக்கின் மனைவிக்கு மெசேஜ் செய்து, அவரது கணவர் வீட்டில் உள்ளாரா என கேட்டேன். இல்லை என்றும், அவர்களது நண்பர்களில் ஒருவருக்கு கிரிக்கெட் விளையாடும் போது காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் இருப்பதால் இரவு வர தாமதம் ஆகும் என கூறியதாகவும் பதில் அனுப்பி இருந்தார். நானும் அதனை நம்பினேன்.
சிறிது நேரத்தில் அவர் எனக்கு மெசேஜ் செய்து, என் கணவர் வழக்கமாக செல்லும் மதுபான விடுதியின் பெயரை கேட்டார். நான் எதற்கு என கேட்தற்கு பதில் இல்லை. அதனால் நான் சாப்பிட்டு விட்டு, வழக்கம் போல் பேஸ்புக்கில் செய்திகள் பார்த்தேன். அப்போது அதில் சில வீடியோக்கள் இருந்தன. அதில் துப்பாக்கிச் சூடு நடந்தது தெரிந்ததும், அலோக்கின் மனைவியை தொடர்பு கொள்ள முயன்றேன்.
அதற்குள் எங்கள் வீட்டிற்கு வந்த 2 போலீசார், என் பெயர், எனத கணவரின் பெயர், பிறந்த தேதி போன்ற விபரங்களை கேட்டு விட்டு, அவர் இறந்து விட்ட தகவலை கூறினர். நான் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு என் கணவர் பிணமாக கிடந்தார். என்னை அவர் அருகில் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வந்தனர். விசாரணை நடத்தினர்.
இங்கு நாங்கள் ஏராளமான கனவுகளுடன் வந்தோம். அவர் படித்தது இங்கு தான். அவருக்கு இங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதனால் தனிப்பட்ட முறையில் இந்த நாட்டிற்கு நிறைய செய்ய வேண்டும் என விரும்பினார். ஆனால் இங்கு அடிக்கடி நடக்கும் துப்பாக்கிச்சூட்டால் வருத்தம் அடைந்திருந்தேன். அவர் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர். குழந்தைகளை அவருக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் தான் அவர் தனது அப்பாவுக்கு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார் என்றார்.