புதுடில்லி : சர்க்கரை நோய் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பெங்களூருவில் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கெஜ்ரிவாலுக்கு சிகிச்சை :
டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். பஞ்சாப் தேர்தலை பிரசாரத்தை முடித்து விட்டு, நேற்று டில்லி திரும்பிய அவருக்கு கடும் காய்ச்சலும் ஏற்பட்டு உள்ளது. மேலும், ரத்த கொதிப்பு பாதிப்பும் உள்ளது.இதனையடுத்து, சர்க்கரை நோய் மற்றும் காய்ச்சலுக்காக இயற்கை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் நாளை (பிப்.,7) பெங்களூரு செல்கிறார். அங்கு அவர் 12 முதல் 14 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர் இருமல் நோயால் அவதிப்பட்டு வந்த கெஜ்ரிவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
English Summary:
New Delhi: Delhi Chief Minister Kejriwal who suffers from diabetes and flu in Bangalore is the nature of medical treatment