சென்னை : சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் வழிகள் அனைத்தும் தடைபட்டு வருகின்றன. இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி வறண்ட விட்டதால், ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கண்டேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் கிருஷ்ணா நதிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திறக்கப்படும் நீரின் அளவு 1300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது பலரையும் கவலையடைய வைத்துள்ளது.