கோஹிமா:நாகாலாந்தில் உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் 2 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான பழங்குடியினர் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு:
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பிப்ரவரியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.இதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை கண்டித்து, நாகா பழங்குடியினர் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். உள்ளாட்சி தேர்தல் நாளான பிப்., 1 -ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
2பேர் பலி:
இன்றும் தொடர் கடையடைப்பு போராட்டத்தை நாகா பழங்குடியின அமைப்பு மேற்கொண்டது. போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. திமாபூரில் நடந்த வன்முறை சம்பவத்தில் 2 பேர் பலியாயினர். போராட்டம் பல்வேறு இடங்களுக்கு பரவியதால் அரசு அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் நாகா பழங்குடியினர் ஆயிரக்கணக்கானோர் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். முதல்வர் டி.ஆர். ஜலியாங்க் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
தொடர் வன்முறை காரணமாக 12 நகராட்சி தேர்தல்களை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜிலியாங்க் அறிவித்தார். கலவரம் தீவிரமடைந்து வருவதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முதல்வரை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.
English summary:
Kohima: Nagaland, killing 2 violence in the local election. Thousands march to the tribal headquarters since increased anxiety.