
சம்பள உயர்வு மசோதா:
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்துள்ளது. சட்ட சபையின், மொத்தமுள்ள, 70 உறுப்பினர்களில், 67 பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை, 400 சதவீதம் உயர்த்தும் வகையில், சட்டசபையில், 2015ல் மசோதா நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.,க்களின் மாதாந்திர சம்பளத்தை, 88 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.10 லட்சம் ரூபாயாகவும், அதேபோல் அனைத்து படிகளையும் பல மடங்கு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், விளக்கம் கேட்டு, ஏற்கனவே, கோப்புகளை திருப்பி அனுப்பியிருந்தது.
திருப்பி அனுப்பிய மத்திய அரசு:
அதைத் தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவா
ல் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. எனவே, டில்லி கவர்னர், அனில் பைஜால் மூலம், மசோதாவை மீண்டும் டில்லி அரசுக்கே, மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பி உள்ளது. இந்த அளவுக்கு சம்பளம் உயர்த்துவதற்கான காரணம் உள்ளிட்ட சந்தேகங்கள், மத்திய அரசு தரப்பில் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.