
சேலை வழங்கும் போராட்டம் :
இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காக பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சேலை வழங்கும் போராட்டத்தை திமுக அறிவித்திருந்தது. திமுக நகர செயலாளர் செல்வராஜின் வீட்டில் இருந்து சேலையை சீர்வரிசைகளுடன் எடுத்துச் சென்று எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வழங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி ஜெயராமனின் முகமூடி அணிந்த ஒருவருக்கு சேலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவருக்கு சேலை உள்ளிட்ட சீர்வரிசை வழங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பொள்ளாச்சி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது