கூவத்தூர்: கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர் அணிக்கு தப்பி செல்வதை தடுக்க சசி தரப்பில் இருந்து வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் முக்கிய திருப்பமாக நேற்று மாலை சசிகலா தரப்பு அ.தி.மு.க., சார்பில் இடைப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 7 மணிக்கு அவர்கள் மீண்டும் கூவத்தூர் சொகுசு விடுதியிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிருப்பிக்க இடைப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை (18 ம்தேதி) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை முதல்வர் பழனிச்சாமி நிருபிக்க உள்ளார்.
இதற்கிடையில் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஓ.பி.எஸ்., அணிக்கு தப்பி செல்வதை தடுக்க எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் சசிகலா தரப்பு சார்பில் வெளிமாநிலங்களில் இருந்து தனியார் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary:
Kuvattur: kuvattur luxury hotel, which lies on MLAs rose water to prevent escape to the peace-keeping on the part of the team from the bench of the state security thugs reportedly provided