புதுடில்லி: காவிரியில், கழிவு நீர் கலப்பது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து வல்லுனர் குழு அமைப்பது குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாவட்டங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரியில் கலப்பதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கழிவு நீர் கலப்பதை தடுக்க, வல்லுனர் குழு அமைப்பது குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.