
இரண்டு ஆண்டு சிறை தண்டனை :
இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. தொழில் அதிபர் பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அதனால், நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நான்கு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2010ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனையை நிறுத்தி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, கார் இறக்குமதி தொடர்பாக, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய அமலாக்க துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, நடராஜன் உள்ளிட்ட, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 2016 டிச.., 22ல் உத்தரவிட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்.27 ல் துவங்குகிறது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.