காஞ்சிபுரம்: ‛சட்டசபையில் நாளை (பிப்.,18) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் எங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது' என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதுகுறித்து, கூவத்துாரில் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. சட்டசபையில் நாளை (பிப்.,18) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் எங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கு எதிராக பன்னீர்செல்வத்தின் அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீது நாளை மறுநாள் (பிப்.,19) நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களால், சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவை பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். மதுசூதனனும் ஆதரவு தெரிவித்தார். தற்போது, நான் தான் கட்சியின் அவை தலைவர். சசிகலா நியமனம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.