சென்னை: ரயில் பயணத்தின் போது, முன்பதிவு செய்த பெட்டிகளில், பயணிகளிடம் எவ்வித காரணமும் இன்றி டிக்கெட் பரிசோதனை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில், ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் பெண்களிடம் தேவையில்லாமல் டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்வதாக ரயில்வே துறைக்கு புகார் சென்றது.
உத்தரவு:
இதனையடுத்து தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவு: முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளிடம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். 10 மணிக்கு மேல் பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. 10 மணிக்குள் கட்டாயம் டிக்கெட் பரிசோதனையை முடிக்க வேண்டும். உரிய காரணமில்லாமல், ஏற்கனவே டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. 10 மணிக்கு மேல் கிளம்பும் ரயில்கள், போலீசார் புகார் அளிக்கும் பயணிகள் மற்றும் ரயிலில் இறக்கி விடப்பட வேண்டியவர்களிடம் மட்டுமே இரவில் சோதனை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தியமில்லை:
இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர்கள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. சில வருடங்கள் முன்பு வரை ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கெட் பரிசோதகர் இருப்பார். ஆனால், தற்போது ஒவ்வொரு டிடிஇ பொறுப்பில் 3 அல்லது 4 பெட்டிகள் அளிக்கப்படுகின்றன. டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாத வரையில், இந்த உத்தரவு நடைமுறையில் சாத்தியமில்லை எனக்கூறினர்.
English Summary:
Chennai: During the train journey, booked in the boxes, with passengers asked to conduct testing without justification ticket. During the night, the train without a ticket and the ticket inspectors asked the woman's harassment complaint went to the railway sector.