மத்திய பட்ஜெட்டில், 'கிளீன் எனர்ஜி' வரி உயர்த்தப்படாததால், கூடுதல் நிதி நெருக்கடியில் இருந்து, மின் வாரியம் தப்பியுள்ளது.
நிம்மதி:
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பயன்படுத்த, ஆண்டுக்கு, 2.75 கோடி டன் நிலக்கரி தேவை. முழு அளவில் உற்பத்தி செய்யாததால், மின் வாரியம், இரண்டு கோடி டன் நிலக்கரியை மட்டுமே பயன்படுத்துகிறது. நிலக்கரி எரிக்கும் போது, சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்க மத்திய அரசு 'கிளீன் எனர்ஜி செஸ்' என்ற சுற்றுச்சூழல் வரி வசூலிக்கிறது. இது 2015 - 16ம் ஆண்டில், ஒரு டன் நிலக்கரிக்கு, 200 ரூபாயாக இருந்தது. அதன்படி, மின் வாரியம், ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரி செலுத்தியது.நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சுற்றுச்சூழல் வரி, ஒரு டன் நிலக்கரிக்கு,
400 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், மின் வாரியத்துக்கு கூடுதலாக, 400 கோடி ரூபாய் செலவானது. இந்நிலையில், வரும் 2017 - 18ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, சமீபத்தில் தாக்கல் செய்தார். அதில், சுற்றுச்சூழல் வரியை உயர்த்தாததால், மின் வாரியம் நிம்மதிஅடைந்துள்ளது.
உறுதி:
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயிலில் நிலக்கரி கொண்டு வர, சரக்கு கட்டணமாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய்; கிளீன் எனர்ஜி வரிக்கு, 800 கோடி ரூபாயை, மின் வாரியம் செலவிடுகிறது. இவை, இரண்டும் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவதால், மின் வாரியத்துக்கு கூடுதல் செலவாகிறது. எனவே, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சுற்றுச்சூழல் வரி, ரயில் சரக்கு கட்டணம் உயர்த்தக் கூடாது என, மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம், தமிழகம் உள்ளிட்ட மாநில மின் வாரியங்கள் கோரிக்கை விடுத்தன; அவரும் உறுதியளித்தார். அதனால் தான், சரக்கு கட்டணம், சுற்றுச்சூழல் வரி, பட்ஜெட்டில் உயர்த்தப்படவில்லை, என்றார்.
English summary:
In the federal budget, 'Clean Energy' tax increase addition, since the financial crisis, the surviving member of the Board.