பழனி: பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியுள்ளது. அறுபடை வீடுகளின் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அரோகரா முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் முருகனை வழிபட்டனர்.
தைப்பூச விழாவின் ஒரு பகுதியாக 8-ம் தேதி மாலை முத்துகுமாரசுவாமி வள்ளிதெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல இ்டங்களிலிருந்து பக்தர்கள் காவடிகளை சுமந்தபடி பாத யாத்திரையாக முருகபெருமானை தரிசிக்க வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.