சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்., எதிர்த்து ஓட்டளிக்கும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு:
முதலமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோருகிறார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. காங்கிரசின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் நம்பிக்கை ஓட்டெடுப்பில், காங்., நிலைப்பாடு குறித்து இன்று(பிப்.,18) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ராகுல் உத்தரவு:
இந்நிலையில், இதுகுறித்து, காங்., பொதுச் செயலரும், தமிழக பொறுப்பாளருமான முகல் வாஸ்னிக் கூறியதாவது: இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓட்டுப்போடுமாறு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு கட்சியின் துணை தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக ஓட்டளிப்பர். இவ்வாறு, முகுல் வாஸ்னிக் கூறினார்.