அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, சில புதிய அறிவிப்புகள், மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் தெளிவில்லாததால், எதிர்பார்த்த பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மத்திய பட்ஜெட்டில், அரசியல் கட்சி கள், 2,000 ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக நன்கொடை பெறக் கூடாது; அதற்கு மேற்பட்ட தொகையை, 'டிஜிட்டல்' முறையிலோ அல்லது காசோலையாக
வோ தான் பெற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுக்க முடியும்:
கட்சிகளின் நன்கொடைகளை, இந்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அல்லது தேர்தல் கமிஷன் ஆகிய இரண்டில், ஏதேனும், ஓர் அமைப்பு, சரிபார்க்க வழிவகை செய்தால் மட்டுமே, கட்சிகளுக்கு நன்கொடையாக கறுப்பு பணம் வருவதை தடுக்க முடியும். ஆனால், கட்சிகள் பெறும் நன்கொடைகளை கண்காணிப்பது பற்றிய அறிவிப்பு, பட்ஜெட்டில் இல்லை.
மேலும், கட்சிகளுக்கு, 2,000 ரூபாய்க்கும் மேல் நன்கொடை தருவோரின் பட்டியலை, வருமான வரித்துறைக்கோ அல்லது வேறு ஏதேனும் தணிக்கை அமைப்பிடமோ, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றஅம்சமும் இல்லை. அதனால், ஒருநபரிடம் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வாங்கினாலும், அதை பல பேரிடம் வாங்கியது போல, வரி ஏய்ப்பு செய்ய முடியும்.
எனவே, 2,000 ரூபாய் நன்கொடை தருவோரின் பட்டியல் வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும்.
மேலும், அரசியல் கட்சிகள், குறிப்பிட்ட காலவரையறைக்குள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் மட்டுமே, வரி சலுகை கிடைக்கும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ஏற்கனவே நடைமுறை யில் உள்ள சட்டம், பட்ஜெட்டில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது புதிதல்ல என, வருமான வரித்துறையினர் கூறுகின்றனர்.
முதன்முறையாக:
இதுதவிர, இந்திய சட்ட வாரியம் மற்றும் தேர்தல் கமிஷன் ஆகியவை, ஏற்கனவே கூறியுள்ள சீர்திருத்தங்கள் எதுவும், பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனினும், அரசியல் நன்கொடைகளை வெளிப்படையாக்க வேண்டும் என்ற நோக்கம், பட்ஜெட்டில் முதல் முறையாக எதிரொலித்திருப்பதை பாராட்டலாம். இதை பற்றியெல்லாம், கட்சிகள் கண்டுகொள்ளாமல், நன்கொடைகள் அளித்தோரின் பட்டியலை, தாமாக முன்வந்து வெளியிட்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.

English summary:
The political parties receiving donations, to create transparency, some new announcements, published in the federal budget. But, they obscured the question whether they will have the expected result. In the federal budget, political parties, more than Rs 2,000 in cash donations not to be; More money, 'digital' to check whether or just want to get Vo predicted