சென்னை : விலங்குகள் நல அமைப்பான, 'பீட்டா'வுக்கு தடை விதிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனு:
சென்னை, அயனாவரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர், தாக்கல் செய்த மனு: விலங்குகள் நல அமைப்பான பீட்டா, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு, இயங்கி வருகிறது. 2,000ம் ஆண்டில், மும்பையில் பீட்டா துவங்கப்பட்டது. இதற்கு, வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது. பிராணிகளின் உரிமையை பாதுகாப்பதாக கூறி, பெண்களை கண்ணிய குறைவாக காட்டும் வகையில், விளம்பரங்களை பீட்டா வெளியிடுகிறது. அரசுக்கு எதிராக வழக்கு தொடுப்பது போன்ற தேவையில்லாத நடவடிக்கைகளில், பீட்டா ஈடுபடுகிறது. எனவே, பீட்டாவுக்கு தடை விதிக்கவும், அதன் இணையதளத்தை முடக்கவும், மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தள்ளுபடி:
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சட்ட மீறல் இருந்தால், அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை, அரசுக்கு உள்ளது. பீட்டா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது, இந்திய இறையாண்மையை மீறுவது போலாகும் என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது, உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்வது போலாகும். ஒரு மனுவை விசாரணைக்கு ஏற்பதும், ஏற்காததும், நீதிமன்றத்தின் உரிமை. ஜல்லிக்கட்டு விஷயத்தில் பீட்டாவுக்கு உள்ள தொடர்பால், விளம்பர நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
English summary:
Chennai: Animal welfare organization, "requested by pitta ban petition was dismissed by the Madras High Court.