புதுடில்லி: கேரளாவில் சட்டம் ஒழுங்கு கெட்டு போனது இங்கு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சரான மேனகா காந்தி கூறியுள்ளார்.
கேரளாவில் திருச்சூர் அருகே நடிகை பாவனா காரில் கடத்தி பாலியல் தொந்தரவுக்குள்ளானார். இது தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் போராட்டமும் நடந்து வருகிறது.
ஆட்சியை கலையுங்கள்:
இந்நிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் மேனகா கூறியிருப்பதாவது: கேரளாவில் நடந்த சம்பம் கண்டிக்கத்தக்கது. இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதையே இது காட்டுகிறது. பினராய் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.