சென்னை: மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் கடும் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கன மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் தமிழக மக்கள் பல நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. எனினும் எந்த எந்த இடங்களில் மழை பெய்யும் என்பதை தற்போது கணிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் மழை பெய்தால் தமிழகத்தில் பல இடங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்பிருப்பதாக தெரிகிறது.