ரேஷனில், 'ஆதார்' விபரத்தை பதியாதவர்கள், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
தமிழகத்தில், வரும், ஏப்., முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்படுகின்றன. இவை, ரேஷன் கடையில் உள்ள, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் ஆப்'பில், பதியப்படுகிறது.இதுவரை, நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரது, ஆதார் விபரங்களை கூட பதியவில்லை.
ரேசன் கார்டுகள் முடக்கம்:
உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆதார் விபரம் வழங்க, 10 மாதங்களுக்கு மேல் அவகாசம் தரப்பட்டு வருகிறது. ஆனால், பலர் விபரம் தராமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது, ஒரு குடும்பத்தில், ஒருவரின் ஆதார் கார்டு கூட பதியாதவர்களின், ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள், ரேஷன் கடைக்கும், உணவு வழங்கல் அலுவலகத்துக்கும், அலைவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சிரமத்தை போக்க, ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அவர்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களுடன், ரேஷன் கடை எண், மொபைல் எண்ணை ஒரு தாளில் எழுதி, உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கலாம். அவற்றை, அலுவலக ஊழியர்களே பதிவு செய்து, அந்த விபரத்தை தெரிவிப்பர். இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், 'ஸ்மார்ட்' கார்டு கிடைப்பது சிரமம். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
The ration Aadhaar details retain information, you can register at the office of Assistant Commissioner of the food supply.