புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றியதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் இதுவரை, 156 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஜெட்லி தகவல் :
லோக்சபாவில், நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு செய்ததாக நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 156 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் மற்றும் சி.பி.ஐ., மூலம், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கிகளும் அறிக்கை அளித்துள்ளன.
ரிசர்வ் வங்கி ஊழியர்கள், 11 பேரும் இந்த முறைகேடு புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வருங்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: After the announcement of the withdrawal bill, replacement of old notes that there has been abuse throughout the country so far, Finance Minister Arun Jaitley said 156 bank employees have been suspended.