சென்னை : சட்டசபையில் பிப்ரவரி 18 ம் தேதி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக, அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி சட்டசபை செயலாளருக்கு கவர்னர் உத்தரவிட்டிருந்தார். கவர்னருக்கு அளிக்க வேண்டிய அறிக்கை தொடர்பாக, தலைமை செயலகத்தில் இன்று சபாநாயகர் தனபால் , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.