ருமேனியா: ருமேனியா நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் உருவாகியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் முறைகேடு செய்பவர்கள் மீதான நடவடிக்கையை நீர்த்துப்போக செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இதை கண்டித்து தலைநகர் புசாரெஸ்டில் சுமார் 2.5 லட்சம் பேர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை ஒடுக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் மட்டுமின்றி முக்கிய நகரங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. ருமேனியா நாட்டின் பிரதமர் சோரின் க்ரின்டினு புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளார். புதிய சட்டத்தி்ன் மூலம் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 2000 பேர் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
English summary:
Romania: Romania in the country, police fired tear gas to suppress the struggle against the government, but there is tension. Eastern European country of Romania who abuse the new law was enacted in order to dilute the action.