
வாபஸ்:
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவ.,8 ம் தேதி அறிவித்தார். கறுப்பு பணத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
அதிக டிபாசிட்:
நாட்டை துாய்மையாக்க துாய்மை பாரத திட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, நாட்டில் உள்ள பணத்தை துாய்மை ஆக்க ‛துாய்மை செல்வம் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த திட்டத்தில், வங்கி கணக்குகளை ஆராய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. நவ., 8 முதல் டிச.,30 வரையிலான காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பெரும் தொகை டிபாசிட் செய்யப்பட்ட 18 லட்சம் பேரின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.
விளக்கம்:
இதையடுத்து, கணக்கு வைத்திருப்பவர்கள் டிபாசிட் செய்யப்பட்ட பணத்தின் நிதி ஆதாரம் குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களின் இ -மெயில் மற்றும் கைபேசி எண்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காதவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை உறுதி:
துாய்மை செல்வம் திட்டம் குறித்து, மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவர் சுஷீல் சந்திரா கூறியதாவது: நவ.,8 ம் தேதியிலிருந்து திரட்டப்பட்டுள்ள தகவல்களின்படி, 1 கோடி வங்கி கணக்குகளில் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாய். எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்து பணத்தின் இறுதி பயனாளர்கள் வரை ஆராய்வோம். முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய மென்பொருள்:
"செல்லாத ரூபாய் நோட்டு காலத்தில் வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யப்பட்ட பணத்தை சரிபார்க்க புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி எளிதாக மின்னணு முறையில் நிதி ஆதாரங்கள் சரிபார்க்கப்படும்" என மத்திய வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதித்யா தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: After the announcement of invalid currency note of Rs 2 lakh and more than 1 million bank accounts revealed deposits. In addition, the Rs.5 lakh and above 18 lakh accounts and deposits has become unusual. However, tax evasion is a stern action against the perpetrators.