சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை புது ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவதாகக்கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த புகார் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா நகர் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜெயச்சந்திரன். இவர், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, தனது உறவினர் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் தொழிலதிபர் ஒருவர் ரூ.1 கோடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரூ.64 லட்சத்தை மாற்றிக்கொடுத்த ஜெயச்சந்திரன், ரூ.36 லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது.
தொழிலதிபர் பல முறை கேட்டும், ஜெயச்சந்திரன் ரூ.36 லட்சத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட தொழிலதிபர், உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து ஜெயச்சந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
English summary:
Chennai: The old banknotes for new currency notes of Rs 36 lakh fraud Converter complaint made to the police inspector is being investigated