சென்னை: அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால் மதுசூதனனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அதிமுக பொது செயலர் சசிகலா அறிவித்திருந்தார். இதனால் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
சசிகலா நீக்கம்:
இந்நிலையில், அதிமுகவின் பொது செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் நீக்கப்படுகிறார். வெங்கடேஷ், தினகரன் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கபடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் தினகரனை அதிமுக துணை பொது செயலர் பதவியில் அவசர அவசரமாக நியமித்தார்.
அமைச்சர்கள் நீக்கம்:
தொடர்ந்து அதிமுகவிலிருந்து முதல்வர் இடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன, தளவாய் சுந்தரம், வளர்மதி, ஆர்.பி., உதயகுமார். சி.விசண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சசிதரப்பை சேர்ந்த வைகைசெல்வன், அதிகாரம் யாருக்கு உள்ளது என மதுசூதனன் தெரியாமல் உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.