சென்னை : கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்குமார் கூவத்தூரிலிருந்து வெளியேறினார். நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கூவத்தூரிலிருந்து தப்பி ஓட்டம்:
சசிகலா ஆதரவு அணியிலிருந்த கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்குமார் கூவத்தூரிலிருந்து வெளியேறினார். இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பாததால் ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
கட்சிப்பதவி ராஜினாமா:
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: அதிமுக.,வின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை. எனவே இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் செல்கிறேன். கோவை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். பணம், பதவி முக்கியமல்ல. கொள்கை தான் முக்கியம். மக்கள், தொண்டர்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்துள்ளேன். குடம்ப ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீண்டு இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்த வேண்டும். அதிமுக.,விற்குள் ஒரு குடும்பத்தை புகுத்துவதை எதிர்த்தே இந்த முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் அவர் பன்னீர் செல்வத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது பலம்:
மேலும் ஒரு எம்.எல்.ஏ., வெளியேறியதை தொடர்ந்து இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதவான எம்.எல்.ஏ.,க்கள் பலம் 122ஆக குறைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.