திருச்சி: ''சிறை தண்டனை பெற்ற சசிகலா, மேல்முறையீடு செய்ய முடியாது.'' என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கூறினார்.
முடிவுகள் சரியே..
திருச்சி, என்.ஐ.டி.,யில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்த கட்ஜு, விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: சிறை தண்டனை பெற்ற சசிகலா, மேல்முறையீடு செய்ய முடியாது. சீராய்வு மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். ஆனால், பெரும்பாலான சீராய்வு மனுக்கள், தள்ளுபடி தான் செய்யப்பட்டுள்ளன. இடைப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து, ஆறு மாதம் கழித்து தான், விமர்சனம் செய்ய முடியும். தமிழக அரசியல் விவகாரத்தில், கவர்னர் வித்யாசாகரின் முடிவுகள் அனைத்தும் சரியானதே.
ஏராளமான பிரச்னைகள்:
'உ.பி.,யில் ராமர் கோவில் கட்டப்படும்' என, பா.ஜ., தெரிவித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை என ஏராளமான முக்கிய பிரச்னைகள் உள்ளன. ராமர் கோவில் கட்டுவதால் இந்த பிரச்னைகள் முடிந்து விடாது,இவ்வாறு அவர் கூறினார்.