சென்னை: தமிழக தொழில் துறை அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத், கடுமையான கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது, அவரை, மருத்துவமனை வரை சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார் முதல்வர் பன்னீர்செல்வம். இது, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்த, அமைச்சர் சம்பத் உடல் நலம் குறித்து போனில் கூட விசாரிக்கவில்லை. இதனால், சசிகலா மீது, சம்பத் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, பன்னீர்செல்வத்தை ஏற்க மறுப்பதால், கட்சியில் கடும் குழப்பம் நீடிக்கிறது; ஆட்சி அதிகாரத்திலும் குழப்பங்கள் தொடருகின்றன.
இரண்டு குரூப்:
கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்து மட்டங்களிலும், இரண்டு குரூப்பாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். துவக்கத்தில், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் இருந்தது. பின், ஒவ்வொருவராக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கத் துவங்கி உள்ளனர். அந்த வகையில், தொழில் துறை அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத், முதல்வர் பன்னீருக்கு ஆதரவாக இருக்கிறார். இதனால், சசிகலா தரப்பினர், அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கழுத்து வலியால் அவதிப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரை மருத்துவமனைக்கே சென்று பார்த்துவிட்டு திரும்பி இருக்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம்.
இது சம்பத் குடும்பத்தினரை மிகுந்த சந்தோஷத்துக்கு ஆளாக்கி இருந்தாலும், கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில், சசிகலா, அமைச்சரிடம் போனிலாவது நலம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாதது வருத்தம்தான் என, சம்பத் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், சசிகலா தரப்போ, அமைச்சர் சம்பத், துவக்கத்தில் இருந்தே, முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருக்கும்போது, நாங்கள் ஏன் அவரை சென்று சந்திக்க வேண்டும் என கேட்கிறதாம்.
English Summary:
Chennai: Tamil Nadu will be industry minister noted, suffered severe neck pain, Chennai, took treatment at Apollo Hospital. Then, with him, went up to the hospital and inquired the health minister Panneerselvam met. The AIADMK general secretary Shashikala cause severe irritation, even on the phone and did not inquire about the health minister Sampat. Thus, on Shashikala, Sampath said to be in serious discontent.