சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆலோசனை:
எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்ததும், அவர், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுடன், அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கட்சியின் பொதுச் செயலர் கொடுத்திருக்கும் பட்டியல் இதுதான். இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், பெங்களூருவில் உள்ள, பொதுச் செயலர் சசிகலாவின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சொல்லி, அந்தப் பட்டியலைக் கொடுத்தார் தினகரன்.
அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள்தான், தற்போது, அமைச்சர்களாகி உள்ளனர். பட்டியலைப் படித்துப் பார்த்த பழனிச்சாமி, எனக்கு மட்டும் இத்தனை துறைகள் எதற்கு, அதை வேறு சிலருக்கு பிரித்துக் கொடுக்கலாமே என்று சொல்லியிருக்கிறார்.
தனித்து செயல்பட வேண்டாம்:
முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் உங்களிமே கொடுக்க வேண்டும் என்பதால்தான், சசிகலா, இப்படி செய்திருக்கிறார் என்று கூறிய தினகரன், பொதுச் செயலர், ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்திருந்தாலும், அதை நீங்கள் மட்டுமே தனித்து செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
ஆட்சி நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய எந்த முக்கிய முடிவானாலும், என்னிடமும், திவாகரனிடமும், நடராஜனிடமும் தெரிவித்து ஒப்புதல் பெற்றே, அதை செயல்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார்.
அதனால், ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் மூவரிடமும் அப்டேட் செய்து, மூவரின் வழிகாட்டுதலோடு ஆட்சியை நடத்துங்கள். இதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
ஒப்புதலுக்கு உத்தரவு:
இதற்கிடையில், இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று சொல்லி, மேலும் ஒரு நிபந்தனையை சொல்லியிருக்கிறார். நீங்கள் முதல்வராக இருந்தாலும், வாரத்தில் ஒரு நாள், பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சசிகலாவை கட்டாயம் சந்தித்தாக வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் அத்தனை முக்கிய விஷயங்களையும் அவரிடமும் சொல்லி, ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இப்படி நிபந்தனை மேல் நிபந்தனை விதித்து, ஆட்சி நிர்வாகப் பொறுப்பை கொடுத்திருப்பதால், முதல்வராக பதவியேற்ற சந்தோஷத்தைக் காட்டிலும், நிபந்தனைகளை நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English summary:
Chennai: Tamil Nadu's new Chief Minister was sworn Edappadi Palanichany. For him, interior, police, IAS., Authorities, financial administration, public services, such as highway, reserved for important sectors.