சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே, நடந்த கப்பல் மோதல் சம்பவம் தொடர்பாக டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த, 28ல், இங்கிலாந்து மேன் தீவிலிருந்து, திரவ காஸ் ஏற்றிக் கொண்டு, எண்ணுார் துறைமுகம் வந்து இறக்குமதி செய்து விட்டு திரும்பிய, எம்.டி.பி., டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும், துறைமுகத்தில் இருந்து, 1.8 நாட்டிகல் மைல் தொலைவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் துளை ஏற்பட்டு, அதிகளவில் கச்சா எண்ணெய் கசிந்தது. அதில் ஒரு பகுதி, எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரையில் ஒதுங்கியது. கடலில், 200 மீட்டர் துாரத்தில் அடர்த்தியாக, கச்சா எண்ணெய் படர்ந்தது. கடலோர காவல் படையின், சுற்றுச்சூழல் பொறுப்பு குழுவினர், 30க்கும் மேற்பட்டோர், இதை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அகற்றும் பணியில் அவர்கள் திணறி வருவதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நேற்று பார்லிமென்டிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், எண்ணூர் துறைமுகத்தின் பொதுமேலாளர் குப்தா அளித்த புகாரின் பேரில், டான் காஞ்சிபுரம் கப்பல் மீது மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விபத்தை ஏற்படுத்தி, கடல் நீரை மாசுபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Chennai, Ennore near the harbor, on the deck of the ship collision incident Don Kancheepuram police have registered a case.