மும்பை: மகராஷ்ட்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை சிவசேனா கட்சி கைப்பற்றுகிறது. இரண்டாவது இடத்தில் பா.ஜ.க.,வும், காங்கிரஸ் 3 வது இடத்திலும் உள்ளன. மும்பை மாநகராட்சியில், 227 வார்டுகள் உள்ளன. 2 ஆயிரத்து 275 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்றைய ஓட்டு எண்ணிக்கையில்; சிவசேனா 84 வார்டுகளிலும் , பா.ஜ.,81 வார்டுகளிலும் வெற்றி பெற்றன, காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களையும் எம்.என்.எஸ். 7 இடங்களிலும் மற்றவை 14 இடங்களை பிடித்தன.
இந்த தேர்தலில் சிவசேனா, பா.ஜ., காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டன. மும்பையில் மேயர் பதவிக்கு 114 பேர் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க., 7 மாநகராட்சிகளையும், சிவசேனா 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றவில்லை.