அமிர்தசரஸ்:பஞ்சாபில் சனிக்கிழமை(நேற்று) நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நவ்ஜோத் சிங் சித்து வாக்குப் பதிவு மையத்தினுள் காரில் சென்றதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறினார்.
அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அந்நகரிலுள்ள, மாதா ஸ்வரூப ராணி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளஓட்டுப்பதிவு மையத்தில்தஓட்டுப்போட சித்துவும், அவருடைய குடும்பத்தினரும் 3 தனித்தனி கார்களில் வந்தனர்.ஓட்டுப்பதிவு மையத்தினுள் கார்கள் நுழைந்தபோது, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்தனர்.எனினும், ஓட்படுப்பதிவு மையத்துக்குள் கார்களில் செல்ல தங்களுக்கு சிறப்பு அனுமதி உள்ளதாக சித்து தெரிவித்தார். இதையடுத்து, அவர்களுடைய கார்கள் உள்ளே நுழைந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறை துணை ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான வசந்த் கர்க் கூறியதாவது:தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அவர்களின் வாகனங்களுடன் ஓட்டுப் பதிவு மையங்களுக்குள் நுழைய முடியும்.
இந்நிலையில், சித்துவும், அவருடைய குடும்பத்தினரும் 3 கார்களில் ஓட்டுப் பதிவு மையத்தினுள் நுழைந்தனர் என்று புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள விடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.சித்துவும், அவருடைய குடும்பத்தினரும் கார்களில் நுழைவது உறுதிப்படுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .
English Summary:
Amritsar, Punjab, on Saturday (yesterday) Navjot Singh Sidhu during the legislative elections, the turnout election booth violated the rules of conduct of the election by going to the car.