மத்திய பட்ஜெட்டில், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய்க்கு குறைவாக, விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு, 30ல் இருந்து, 25 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது. அதனால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் புத்துணர்வு பெறும்; அத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பால் பெரிய பலன் இருக்காது என, சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: இந்தியாவில், வெறும் ஆறு லட்சம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றன; இந்த சலுகை அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த ஆறு லட்சத்திலும், மூன்று லட்சத்திற்கும் குறைவான நிறுவனங்கள் தான் லாபத்தில் இயங்குகின்றன.ஆனால், நாடு முழுவதும், ஐந்து கோடி சிறு, குறு நிறுவனங்கள் இயங்குவதாக மத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. அதில், மூன்று லட்சம் என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஏன் சலுகை கிடைக்காது?
தமிழக சிறு மற்றும் குறு தொழில் நிறுவன கூட்டமைப்பு தலைவர் நித்யானந்தம் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்துள்ள சலுகை, 'பிரைவேட் லிமிடெட்' கம்பெனிகளுக்கு மட்டுமே பொருந்தும். லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்த பின், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் சிரமமானவை. அதனால், யாரும் அதற்கு முன்வருவதில்லை.
நாடு முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்களில், 10 சதவீதத்தினர் மட்டுமே அவ்வாறு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில், சிறு, குறு நிறுவனங்கள் தான், ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேலை தருகின்றன. அவற்றுக்கு, பட்ஜெட்டில் பயன் தரும் அறிவிப்பு இல்லை.மத்திய அரசு, அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கும் அந்த சலுகையை அறிவித்திருக்க வேண்டும். வராக்கடன் செலுத்தும் அவகாசத்தை, 90 நாளில் இருந்து, 180 நாளாக அதிகரித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
In the federal budget, for the year, less than 50 crore, the turnover of the companies, from 30 to 25 per cent tax is reduced. So, small enterprises will be refreshed; There was the expectation that increasing employment in the sector. But the announcement that there would be great benefit, small and marginal operators in the industry said.