ஜெயிலுக்குப் போவதற்கு முன், அ.தி.மு.க.,வில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தன் உறவுக்காரர்களான தினகரனையும், டாக்டர் வெங்கடேஷையும் கட்சியில் மீண்டும் இணைத்திருக்கிறார் கட்சியின் பொதுச் செயலரான சசிகலா. தினகரனை, கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் அறிவித்திருக்கிறார். இதன் மூலம், பொதுச் செயலரான தான் இல்லாத நிலையில், தினகரனே கட்சியை நடத்துவார் என்பதுதான், சொல்லாமல் அவர் சொல்லியிருப்பது.
அதைப் போல, கட்சியின் எல்லா நடவடிக்கைகளிலும், தினகரன் முன்னின்று செய்து வருகிறார். ஆனால், இவர்களைப் போலவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் சகோதரர் திவாகரனை, அவர் மீண்டும் கட்சியில் இணைக்கவும் இல்லை; கட்சிப் பதவி கொடுக்கவும் இல்லை. அதேபோல, மகாதேவன், தங்கமணி, ராவணன் பலரையும் மீண்டும் கட்சியில் இணைக்கவில்லை. இதனால், அவர்களெல்லாம் சசிகலா மீது கடும் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல் வரிசையில்:
இதனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சிக்கு, முதலாவதாக வந்தார் திவாகரன். அவரது மகன் ஜெய் ஆனந்த திவாகரும் வந்திருந்தார். பதவியேற்பு விழாவிற்காகப் போடப்பட்ட சேர்களில் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார். அவரை, வளைத்து வளைத்து ஊடகங்கள் பதிவு செய்ததோடு, அதை பொதுமக்களுக்கும் கொண்டு சென்றனர்.
வாட்ஸ் - ஆப் மூலம் தகவல்:
இதை எதிர்பார்த்துத்தான், அவர்கள் இருவரும் விழாவுக்கு வந்து, தங்களை முக்கியத்துவப்படுத்திக் கொண்டு, முதல் வரிசையில் அமர்ந்தனர். அதன் தொடர்ச்சியாக, திவாகரனும்; அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரும், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, பூங்கொத்து வழங்கி, அ.தி.மு.க.,வின் எடப்பாடி பழனிச்சாமியை பதவி ஏற்க அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை படம் எடுத்து வந்த இருவரும், அதை, உடனடியாக, வாட்ஸ் - ஆப் மூலம் தகவலாக உலகம் முழுக்கப் பரப்பினர். இதன் பின்னணியில், தாங்கள் அ.தி.மு.க.,வில் முக்கியத்துவத்தோடு இருப்பதாகக் காட்டிக் கொள்வதோடு, அமைச்சரவையிலும் தங்கள் முக்கியத்துவம் உள்ளதை ஊருக்கு காட்டிக் கொள்வதற்காகத்தான் என்று, இந்த நிகழ்வுகளுக்கான பின்னணி பற்றி, அ.தி.மு.க.,வில் பரபரப்பாக பேசுகின்றனர்.
English summary:
AIADMK, Jayalalitha sacked from his relatives dinakaran Dr. venkateshwar party includes the party's general secretary Shashikala again. dinkaran, assistant general secretary of the party said. Thus, in the absence of the General Secretary, the party will conduct dinkaran that, he said to himself.