புதுடில்லி: டில்லி சென்றுள்ள தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், காங்., தலைவர் சோனியா மற்றும் துணை தலைவர் ராகுலை நாளை(பிப்.,24) சந்திக்க உள்ளார்.
டில்லி பயணம்:
தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் முறையிடுவதற்காக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இன்று(பிப்.,23) டில்லி சென்றார். மாலை பிரணாப்பை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சோனியாவுடன் சந்திப்பு:
இந்நிலையில் நாளை(பிப்.,24) காங்., தலைவர் சோனியாவை ஸ்டாலின் சந்திக்கிறார். இச்சந்திப்புக்கு பின் காங்., துணை தலைவர் ராகுலையும், ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.