சென்னை: ''ஐந்து ஆண்டுகளுக்கு, பன்னீர்செல்வமே முதல்வராக இருக்க வேண்டும்; தேவைப்பட்டால், நாங்கள் ஆதரவு தருகிறோம்,'' என, சட்டசபையில், தி.மு.க., துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். இதை, தி.மு.க.,வினர் மேஜையை தட்டி வரவேற்றனர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முழித்தனர்.
மனமில்லை:
சட்டசபையில், நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் பேசும்போது, ''அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவருக்கு பாராட்ட மனமில்லை,'' என்றார்.
ஆதரவு:
அப்போது, துரைமுருகன் எழுந்து, ''நான் மனதார உங்களை பாராட்டுகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு, நீங்களே முதல்வராக இருக்க வேண்டும். உங்கள் பின்னால் உள்ள சக்தியை பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், நாங்கள் ஆதரவு தருகிறோம்,'' என்றார். உடனே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி, மகிழ்ச்சி தெரிவித்தனர். அ.தி.மு.க.,வினர், என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தனர்.
மகிழ்ச்சி:
பின், காங்கிரஸ் - எம்.எல்.ஏ., விஜயதாரணி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையை, நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது. அவரது பிரம்மாண்டம், பேச்சு, எதையும் மறக்க முடியவில்லை. தற்போது, எளிமையான முதல்வரை பெற்றுள்ளோம். அவர் பேசும்போது, பலர் குறுக்கீடு செய்தனர். அதற்கு, முதல்வர் பதில் அளித்தார். ஜனநாயகம் இருக்க வேண்டும் என எதிர்பார்த்த, என்னை போன்றவர்களுக்கு, இது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு விஜயதாரணி பேசினார்.
English Summary:
Chennai: '' For five years, must be pannirselvam CM; If necessary, we offer support, '' as the assembly, the DMK, the vice president said duraimurgan The DMK, greeted by a staggering tap table;