
அந்த கடிதத்தில், ‛ என் குடும்பத்தினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, கூறியிருந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவே பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியை அவர் கைப்பற்ற முயற்சித்த போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனால், சிறைக்கு செல்லும் முன் தன் உறவினர்கள் தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேசை கட்சியில் சேர்த்தார். அடுத்த நாளே, துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் தினகரன் நியமிக்கப்பட்டார்.
இன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர், துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.