புதுடில்லி : 'உ.பி., சட்டசபை தேர்தலுக்கு பின், இந்தியாவுடன், அமைதி பேச்சுவார்த்தை துவங்கும்' என, பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு சீர்கெட்டு, அமைதி பேச்சும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், 'இந்தியாவுடன் மீண்டும் பேச்சு துவங்கும்' என, பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாக்., அமைச்சர், அசன் இக்பால், இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அந்நாட்டுடன் நிலவி வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கிறது; அதன் பின், பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகும் என நம்புகிறோம். பாக்., - சீனா இடையே சரக்கு போக்குவரத்திற்கான சாலை அமைப்பதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டிக்கிறோம். பாகிஸ்தானின், பொருளாதார வளர்ச்சிக்காக, இந்த சாலை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI: Uttar Pradesh assembly elections, the country at the start of peace talks as "Pakistan hopes. Terrorists who are hiding in Pakistan-occupied Kashmir, Jammu - Kashmir are engaged in sabotage. Thus, India - Pakistan relations deteriorated and stalled peace talks.