சென்னை: ‛ நான் இறந்து விட்டதாக, ‛வாட்ஸ் ஆப்'பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர்' என, நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகர் கருணாஸ், திருவாடானை தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.முக்குலத்தோர் புரட்சி படை என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். தமிழகத்தில், சசி அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இன்று அளித்த புகார்:
அரசியல் மட்டும் சினிமா துறையில் என் வளர்ச்சியை கண்டு பொறாமை அடைந்துள்ளவர்கள் சமூக வலைதளங்கில் என்னை பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த பிப்., 22ம் தேதி எனது பிறந்த நாள். அன்று ‛வாட்ஸ் ஆப்'பில் ஒரு தகவல் பரவியது. நான் திடீரென இறந்து விட்டதாக கூறி, கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அதில் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்து என் மனைவி கடும் வேதனை அடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு உரிய சிகிச்சையும் பெற்று உள்ளார். என்னை பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டு வருபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கருணாஸ் புகாரில் கூறியுள்ளார்.