பாலாற்றில் கட்டியுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சோமபள்ளம் அருகே சின்ன எரு என்ற பாலாற்றின் துணை ஆற்றில் தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 8 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் பாலாற்று நீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனம் ஆகும் என்று கூறியுள்ள ராமதாஸ் ஆந்திர அரசின் செயலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Friday, 3 February 2017
Home »
chennai
,
ramadoss
,
tamil nadu
» பாலாற்று தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்