பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இந்த வழக்கு கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.
செலவு ரூ.12.04 கோடி:
இந்நிலையில் இந்த வழக்கு செலவு குறித்து தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும். இது கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2016 வரை செய்யப்பட்ட செலவு. இதில் நீதிமன்ற கட்டணம், நீதிபதி, வழக்கறிஞர்கள் ஊதியம், பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் அடக்கம். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.