புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் பணமில்லா வர்த்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை சுமார் 94 கோடி ரூபாய் செலவிப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விளம்பரங்கள்:
இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் தெரிவித்ததாவது: இதுவரை டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றம் பணமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக மொத்தம் 93 கோடியே 93 லட்சத்தி 28 ஆயிரத்து 566 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இ-பேமண்ட்:
இதில் செய்தித் தாள்களில் விளம்பரங்கள் கொடுத்ததற்காக மட்டும் ரூ.14.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு சேர வேண்டிய தொகையை இ-பேமண்ட் மூலமாக மத்திய அரசு வழங்கியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
English Summary:
NEW DELHI: After action withdrawal of currency note and cashless trade to create awareness among the people in the digital transaction budget federal government so far has nearly 94 crore.