சென்னை: “தற்கொலை செய்துள்ள விவசாயிகள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று சட்டப்ேரவையில் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு முன்பு குறைந்தபட்சம் ஏற்கனவே போடப்பட்டிருக்கக்கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, முதலீடுகளை பெறுவதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட வேண்டும். அத்திக்கடவு-அவினாசி வெள்ள கால்வாய் திட்டம் குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
விவசாயிகள் தற்கொலை குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் 17 விவசாயிகள்தான் தற்கொலை என தெரிவித்திருக்கிறார். ஆனால், அதே அறிக்கையில் மேலும் சொல்கிறார், ‘‘வறட்சி பாதிப்பு காரணமாக அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஊடகங்களில் கூட இந்த செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி விரிவான அறிக்கையை தயாரித்து தர வேண்டும் என்று மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடத்திலே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது” என்று சொன்னார். அறிக்கை கிடைத்ததற்கு பிறகு உரிய நிவாரண தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று அந்த நம்பிக்கையை, உறுதியை தந்திருக்கிறார். அந்த அறிக்கையில் மட்டுமல்ல, இதே சட்டமன்றம் தொடங்கியதற்கு பின்பு, 27ம் தேதி சட்டமன்றத்தில் இதே பிரச்னை வந்தபோது, ஆட்சித் தலைவரிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம் என்ற அந்த பதிலைத்தான் இங்கேயும் அவர் வழங்கியிருக்கிறார்.
எனவே, விவசாயிகளின் தற்கொலை என்பது மிக மிக முக்கியமான ஒரு பிரச்னை. எனவே, அந்த குடும்பங்களுக்கு நிவராணம் கொடுக்க வேண்டும் என்பது மிக அவசியமாக இருக்கிறது. அரசு ஒரு முடிவு எடுத்து அறிக்கை வெளியிடுகிற நேரத்தில், அந்த அறிக்கை வந்ததற்கு பிறகு 21 நாட்கள் இன்றோடு கழிந்திருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து இன்னமும் அந்த அறிக்கை வரவில்லை என்று சொன்னால், விவசாயிகளுடைய பிரச்னை பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில் நான் வைக்கக்கூடிய ஒரு வேண்டுகோள், உடனடியாக அறிக்கையை பெற்று, நிவாரண நிதி வழங்க வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
தென்னகத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இன்னமும் அமைக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் இதே சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றியிருக்கக்கூடிய உரையில், தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆளுநர் உரையில் அதுபற்றிய எந்த செய்தியும் இல்லை. மின் கட்டண உயர்வுக்கே நாங்கள் ஒப்புகொள்ள மாட்டோம் என்று சொன்ன நீங்கள், 2015ல் 15% மின் கட்டண உயர்வுக்கு கையெழுத்து போட்டு இருக்கின்றீர்கள். அப்படியென்றால் 2015ல் உதய் திட்டத்தில் சேருவதற்கு முன்னோட்டமாக தான் மின் கட்டணத்தை உயர்த்தினீர்களா? 2019ல் 6% மின் கட்டணம் உயர்வு செய்வோம் என்று ஒப்புக்கொண்டு வந்து இருக்கின்றீர்களே, அது எப்படி?.
விவசாயிகள் தவிர அனைத்து மின் நுகர்வோருக்கும் 50 யூனிட்டுகளுக்கு மேல் நுகர்வோருக்கு 31-12-2018க்கு உள்ளும், மாதம் 200 யூனிட்டுகளுக்கு மேல் நுகர்வோருக்கு 31-12-2019க்கு உள்ளும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று ஒரு கெடு விதிக்கப்பட்டு இருக்கிறது. அப்படியெனில், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கக்கூடிய இலவச மின்சாரம் என்ன ஆகப்போகிறது?.
உதய் திட்டத்தில் சேருவதற்கு அதிமுக அரசு சொன்ன காரணங்கள் எதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. உதய் திட்டத்தில் சேர்ந்தால் மின் பயனாளிகளுக்கு, மின் வாரிய ஊழியர்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு என்ன பயன் என்பதை விளக்கிட வேண்டும்.
முதல்வர் 110 விதியை பயன்படுத்தி ஒரு அறிக்கையை படித்தார். மீனவச் சமுதாயத்தை சேர்ந்த தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்கள் அங்கிருக்கக்கூடிய தோழர்களெல்லாம் அதிகமான அளவிற்கு தாக்கப்பட்டு உள்ளார்கள். எனவே, அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும். ஆளுநர் உரையில், இந்தாண்டுக்கான கொள்கை அறிவிப்பு எதுவும் இல்லாதது மிகவும், வருத்தத்திற்கு உரியது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், ஆளுநர் உரை ‘கானல் நீர், கண்ணுக்கு புலப்படாத ஒரு பொருட்காட்சி’. நள்ளிரவில் நடுக்கடலில் தனிப்படகில் திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு தாகம் ஏற்பட்டது. குடிப்பதற்கோ தன்னிடம் தண்ணீர் இல்லை. அவர் புலம்புகிறார். ‘எப்புறமும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் இடத்தில் தனது தாகத்தை தணிப்பதற்கு குடிநீர் ஒரு சொட்டு கூட இல்லாமல் போனதே’ என்று கலங்குகிறார்.
அந்த நிலையில்தான் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் விளக்கம்
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்” விவசாயிகளின் தற்கொலை மட்டுமல்லாமல், மற்ற வகையில் நடந்த மரணங்கள் தொடர்பாக கலெக்டர்கள் வாயிலாக அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. அந்த அறிக்கைகள் கிடைத்த பின்னர் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்று விளக்கம் அளித்தார்.
English Summary:
Chennai: "The farmers have committed suicide in the house should provide a government job," he spoke of Stalin in tamil nadu assembly. athikadavu avinashi flood canal project, there is no mention in the text of the governor.