தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், வட சென்னை என்ற பெயரிலும், துாத்துக்குடியில் துறைமுகம் அருகிலும், அனல் மின் நிலையங்கள் உள்ளன. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு, திருவள்ளூர் - வல்லுார்; துாத்துக்குடியில், என்.டி.பி.எல்., என்ற பெயரில், அனல் மின் நிலையங்கள் உள்ளன.
உற்பத்தி நிறுத்தம்:
வட சென்னை மின் நிலையத்தில், 600 மெகாவாட் திறன் உள்ள ஒரு அலகில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் இரவு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. துாத்துக்குடி மின் நிலையத்தில், 210 மெகாவாட் ஒரு அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று காலை உற்பத்தி நிறுத்தப் பட்டது.
வல்லுார் மற்றும் என்.டி.பி.எல்., மின் நிலையங்களில், தலா, 500 மெகாவாட் திறன் உள்ள ஒரு அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே, துாத்துக்குடி மின் நிலையத்தில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, 630 மெகாவாட்; பழுது காரணமாக, வட சென்னை மின் நிலையத்தில், 210 மெகாவாட் உற்பத்திநிறுத்தப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக, தற்போது, மின் தேவை உயர்ந்து வருகிறது. இந்த சமயத்தில், மத்திய, மாநில மின் நிலையங்களில், 1,810 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுதான மின் நிலையங்களில், விரைவில் பழுதை சரி செய்து, மீண்டும் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.