ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் முதல்வர் மெகபூபா அரசியலமைப்பு சட்டபிரிவு 370 குறித்து தன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என கூறி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் சபாநாயகரின் மைக்கை உடைத்தனர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீது நாற்காலிகள் துாக்கி வீசினர். காகிதங்களை கிழித்து வீசினர். இதனால், சட்டசபையில் முன்னேப்போதும் இல்லாமல் கடும் அமளி உருவானது.
காஷ்மீரில் பா.ஜ. , - மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி உள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அப்போது முதல்வர் மெகபூபா முப்தி காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 குறித்து தன்னுடைய நிலைபாட்டை வெளிப்படையாக கூற வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி, காங். ஆகிய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் கவிந்தர் குப்தா அமைதி காக்குமாறு வலியுறுத்தினார்.
இருப்பினும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் லால்சிங் என்பவரை எதிர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அடிக்க பாய்ந்தனர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீது நாற்காலிகள் துாக்கி வீசினர். காகிதங்களை கிழித்து வீசினர். இதனால், சட்டசபையில் முன்னேப்போதும் இல்லாமல் கடும் அமளி உருவானது.
English summary:
Srinagar: Jammu and Kashmir Chief Minister mekapupa constituent assembly of 370 state assembly to his position by saying that the opposition parties have been engaged in Sabha.