சென்னை : சென்னை, எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி, 6வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடலில் கலந்த கச்சா எண்ணெய் :
கடந்த வாரம், சென்னை, எண்ணூர் துறைமுகம் அருகே ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளாகின. துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு கப்பலில் ஏற்றி வரப்பட்ட கச்சா எண்ணெய் சிதறி, கடலில் கலந்தது. இதனால் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள், பலியாகின. இதனையடுத்து கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை கரை ஒதுக்கி, அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து 6வது நாளாக இன்றும் நடந்து வருகிறது.
அகற்றும் பணி தீவிரம் :
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கச்சா எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தன்னார்வலர்கள் பலரும் இந்த பணியில் இணைந்துள்ளனர். இதுவரை 40 டன் கச்சா எண்ணெய் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கச்சா எண்ணெய் முழுமையாக அகற்றப்படவில்லை. சென்னை எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி, 24 கி.மீ., தொலைவிற்கு கச்சா எண்ணெய் பரவி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக மத்திய அரசின் உதவியை கேட்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
English summary:
Chennai: Chennai, Ennore Port, near the sea mixed with the crude oil removal work, is going to continue till the 6th day.The sea mixed with the crude oil: