தானே: மகாராஷ்டிராவில் நடந்த திருடனின் திருமணத்தில் ஆயிரக்கணக்கான வழிப்பறி திருடர்கள் நாடு முழுவதுமிருந்து வந்து கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பிவலி என்ற இடத்தில் தபீக் தேஜ் ஷா என்பவனுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஷா கடந்த பல ஆண்டுகளாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். 20 வயதேயாகும் ஷா மீது 2012ம் ஆண்டே மகாராஷ்டிராவின் கடுமையான ‘மொக்கா’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டான்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பிறகு மீண்டும் 2016ல் மொக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இம்முறை போலீசாரால் அவனை கைது செய்ய முடியவில்லை. அவன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தான். இந்நிலையில் அவனுக்கு நேற்று முன் தினம் அம்பிவலியில் திருமணம் நடந்தது. இது குறித்து போலீசாருக்கும் தெரிய வந்தது. ஆனால் போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த திருமணத்தில் டெல்லி, போபால், அவுரங்காபாத், கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளை சேர்ந்த செயின் பறிப்பு திருடர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கில் திருடர்கள் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அப்படி இருந்தும் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஷாவை கைது செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசார் ஷாவை கைது செய்யவில்லை. திருமணத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு வெறுமனே கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபட்டனர். இது குறித்து மூத்த இன்ஸ்பெக்டர் ரவீந்திராவிடம் கேட்டதற்கு, எங்களுக்கு இத்திருமணத்தை கண்காணிக்க மட்டுமே உத்தரவிடப்பட்டது. திருமணத்தை தடுக்க விரும்பவில்லை. அவ்வாறு தடுக்க முயன்றால் அவர்கள் தங்களது வீட்டு பெண்களை கேடயமாக பயன்படுத்தக்கூடும் என்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
English summary:
Thane Maharashtra in the thief's wedding was attended by thousands of snatching thieves come from all over the country. Ampivali in Thane district in Maharashtra, was the place where the marriage was arranged thapik Tej Shah. Shaw has been involved in the events of the last several years the chain to flush. 20 age Shah of Maharashtra on 20 November 2012, tough 'Mocha' case is filed under arrest.