சென்னை : எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு நேற்று பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசின் மீது நம்பிக்கை கோருவதற்கான ஓட்டெடுப்பு நாளை நடக்க உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை கூட்டம் நாளை (பிப்ரவரி 18) கூட உள்ளது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு, கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. சட்டசபை நடக்க உள்ளதை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Chennai: The new government yesterday committed Edappadi Palanisamy. Confidence on the government to request a new poll is to be held tomorrow. The Tamil Nadu Assembly meeting tomorrow (February 18) is even.