நெல்லை :நெல்லை மாவட்டத்தின் பெரும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக நம்பியுள்ள இந்த மாவட்ட விவசாயிகளுக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்தான் இரு கண்கள். நெல்தான் முக்கிய விவசாய பயிர். இங்கு 1 லட்சத்து 51 ஆயிரத்து 600 ஹெக்டேராக இருந்த விவசாயம் மழை பொய்த்ததால் ஒரு லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 715 விவசாயிகளும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 763 விவசாய தொழிலாளர்களும் என 4 லட்சத்து 95 ஆயிரத்து 478 பேர் இருந்தனர். விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டதால் தற்போது 3 லட்சத்து 35 ஆயிரமாக குறைந்து விட்டது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு என 11 அணைகள் உள்ளன. இவை இப்போது சிறிய குட்டைகள் போல் காட்சியளிக்கிறது. எப்போதும் பசுமை போர்த்தியது போல காட்சி தரும் இம்மாவட்டத்தின் விவசாய நிலங்கள் அனைத்தும் காய்ந்து தரிசுகளாக மாறி விட்டன. முன் கார், கார், பிசானம் என மூன்று போக சாகுபடி, ஒரு சாகுபடிக்கு கூட வழியின்றி போய் விட்டது. இதற்கு முக்கிய காரணம் கால்வாய்கள் எதுவும் தூர் வாரப்படவில்லை. அனைத்தும் மணல் மேடுகளாக மாறி விட்டன. காரணம் மழைநீர் முழுவதும் கடலுக்கு வீணாகச் செல்வதுதான்.
கார் பருவத்தில் 17,723, பிசான பருவத்தில் 10,474 ஹெக்டேர் நெல் பயிர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதுவும் பாபநாசம் அணை திறக்கப்படாததால் தீய்ந்து கருகி விட்டது. மழையை நம்பி மானாவாரியில் பயிரிட்ட மக்காச்சோளம், சூரியகாந்தி, பருத்தி அனைத்தும் சருகாகி விட்டது. விவசாயம் பொய்த்துப் போன நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடனை கட்டச் சொல்லி விவசாயிகளின் கழுத்தை நெரித்து வருகின்றன. ஆண்டு சராசரி மழையளவு 814.80 மிமீ. ஆனால் 2016ல் 396.88 மிமீ மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது 51.3 சதவீதம் குறைவு. இதனால் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. 1,221 பொதுப்பணித் துறை கால்வரத்து குளங்களும், 1,297 மானாவாரி குளங்களும் உள்ளன. இவை மட்டுமின்றி கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன.
பாலைவனமான சோலை வனம்: நெல்லை மாவட்டத்தை வளமாக்குவது தாமிரபரணி ஆறு. இதற்கு வற்றாத ஜீவநதி என்ற பெயர் உண்டு. மழை ஏமாற்றம் அளித்ததால் தாமிரபரணி இன்று வறண்டு விட்டது. அளவுக்கு அதிகமாக ஆற்று மணலை சுரண்டி கடத்தியதால் குடிநீர் ேதவைக்கு கூட இன்று தண்ணீரின்றி பாலைவனமாக மாறி விட்டது. இதனால் சோலை வனமாக இருந்த தாமிரபரணி ஆற்றுப் படுகைகள் அனைத்தும் அடையாளம் தெரியாமல் உருமாறி விட்டது.
வேளாண்மை சாகுபடி வகைகள் மற்றும் பரப்பளவு: நெல் 83,300 ஹெக்டேர், சிறுதானியங்கள் 17,400 ஹெக்டேர், பயறு வகை பயிர்கள் 39,810 ஹெக்டேர், பருத்தி 4 ஆயிரம் ஹெக்டேர், கரும்பு 3,100 ஹெக்டேர், எண்ணெய் வித்துப் பயிர்கள் 3,990 ெஹக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிசான நெல் சாகுபடி கைவிடப்பட்டுள்ளது. மக்காச்சோளம், பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் என பயிரிட்ட அனைத்தும் கருகிவிட்டன. இதனால் கடனை எப்படி கட்டுவது, அடகு வைத்த நகையை எப்படி மீட்பது என மீளாத்துயரில் விவசாயிகள் உள்ளனர். அம்பை 16 நெல் ரகத்தை அறிமுகப்படுத்திய நெல் விளையும் பூமியான ெநல்லை சீமை இன்று வறட்சியின் கோரப்பிடியில் நிர்க்கதியாகி நிற்கிறது. இதற்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொரிதான்.
நதிநீர் இணைப்பு என்னாச்சு:
தாமிரபரணி ஆற்றில் மழைக்காலத்தில் வீணாகச் செல்லும் நீரை வறட்சியான ராதாபுரம், நாங்குநேரி பகுதிகளுக்கு கொண்டு செல்ல 2009ல் ரூ.369 கோடியில் தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டப் பணி துவங்கப்பட்டது. அது நிறைவேறி இருந்தால் இன்று குளங்களில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டமாவது உயர்ந்திருக்கும். 2011ல் ஆட்சி மாறியதால் கடந்த 6 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த திட்டத்தின் தற்போதைய மதிப்பீடு ரூ.872 கோடியாக உயர்ந்துள்ளது.
English summary:
Tirunelveli district is located at the foot of a large part of the Western Ghats. The district farmers who rely on agriculture as the main industry, Papanasam, manimuttaru anaikaltan both eyes. Neltan main agricultural crop. 1 lakh 51 thousand 600 hectares to one million hectares of agricultural scanty rain has fallen. One lakh 15 thousand 715 farmers and 3 lakh and 4 lakh 95 thousand 478 to 79 thousand 763 people were farm workers. 3 lakh 35 thousand was converted into plots of farmland has fallen now.